Monday, April 18, 2016

உலகப் பெண்கள் நாள் - தோற்றமும் தொடர்ச்சியும்

பண்டைய உலகின் பல்வேறு பகுதிகளில் ஒரே காலப்பொழுதில் தொடர்பற்ற நிலையில் பல மனித இனக்குழுமங்கள் வாழ்ந்திருக்கின்றன. மனித இனத்தின் முதன்மைக் கூறுகளான ஆண், பெண் என்ற இரு பாலருக்குமிடையேயான உறவுநிலைகள் எல்லா இனக்குழுமங்களிடையேயும் ஒரே தன்மை கொண்டனவாக இருக்கவில்லை. பொருளாதாரம், காலநிலை, நில அமைவியல் போன்றன ஒரு சமூகத்தினது நடத்தைகளைக் கட்டமைப்பதில் பெரும் பங்காற்றின. நம்பிக்கை, பண்பாடு, பழக்க வழக்கங்கள் என்பன இந்த நடத்தைகளுக்கேற்ப, உருவாக்கம் பெற்றன. இவை யாவும் ஒன்றிணைந்தே ஆண் பெண் உறவுநிலைகளை வடிவமைத்தன. பெண்கள் தொடர்பான சமூகப் பெறுமானத்தை இவையே தீர்மானித்தன. இதன் அடிப்படையிலேயே உலகப் பெண்ணிய வரலாறு நோக்கப்பட வேண்டும். குறிப்பிட்ட ஒரு சமூகம் சார்ந்த பெண்கள் தொடர்பான வரலாறு அனைத்து இனங்களுக்குமான வரலாறாகி விட முடியாது. அதேவேளை, பெண்ணியம் பற்றிய பண்புகள் பல, எல்லா சமூகங்களுக்கும் பொதுவான இருப்பதனையும் நாம் மறுத்துவிட முடியாது. ஓப்பீட்டளவில் எல்லாச் சமூகங்களிலும் ஆண்களின் ஆளுமையே ஓங்கியிருந்தது என்பதைப் பலரும் ஏற்றுக்கொண்டுள்ளனர். வரலாற்றின் தொடக்க காலத்தில் ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகிறபோது ஆசிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் ஓரளவு மேம்பட்டிருந்தனர் எனலாம். ஐரோப்பியர் மேற்கொண்ட உலகளாவிய ஆட்சி விரிவாக்கத்தின் பின்னரே பெண்ணியம் தொடர்பான போக்குகளில் ஒன்றுக்கு மேற்பட்ட நாடுகள் இணைய ஆரம்பித்தன. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பின்னரே உலகளாவிய வகையில் பெண்ணியப் போக்குகள் ஒருமுகப்படுத்தப்பட்டன. அமைப்பு வழிப்பட்ட செயற்பாடுகள் தோற்றம் கொண்டன. வரலாற்றில் பெண்ணியம் பேரெழுச்சி கொண்டெழுந்த களமாக ஐரோப்பாவே திகழ்கின்றது. அதிகார வெறியும் போரும் நிறைந்திருந்த ஐரோப்பிய சமூகத்தில் பெண்களின் நிலை பேரவலம் மிக்கதாகவிருந்தது. பதின்னான்காவது நூற்றாண்டில் பின்னரே இந்நாடுகளில் பெண்கள் மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான கருத்துகள் எழ ஆரம்பித்தன என்கின்றனர் ஆய்வாளர். பெண்ணியச் சிந்தனைகளின் தோற்றுவாய், வளர்ச்சி, எழுச்சி சார்ந்த நிகழ்வுகளையும் செய்திகளையும் ஐரோப்பிய சமூகம் முடிந்தவரை பதிவு செய்து வைத்திருக்கின்றது. அந்த சான்றுகளின் வழி நின்று ஐரோப்பிய சமூகத்தின் ஊடாகப் பெண்ணியச் சிந்தனை எழுச்சி பெற்ற வரலாற்றைச் குறுகிய வடிவில் தர முயல்கின்றது இக்கட்டுரை. 1949 இல் Simone de Beauvoir என்ற பிரஞ்சுப் பெண் எழுத்தாளர் எழுதிய ““The Second Sex” என்ற பெண்ணியம் தொடர்பான நூல் ஐரோப்பியச் சூழலில் உருக்கொண்ட பெண்ணியச் சிந்தனைகளை வெளிப்படுத்துகின்றது. இந்த நூலே இந்தக் கட்டுரைக்கான திறவுகோலாகவும் தளமாகவும் அமைகின்றது. ‘பாலின வேறுபாட்டுக்கெதிராக எதிராகப் பேனா தூக்கிய முதல் பெண்’ என Christine de Pizan (1364 – 1430) என்பவரைச் சுட்டிக்காட்டுகிறது இந்நூல். இத்தாலியில் பிறந்து பாரிஸ் நகரில் வாழ்ந்தவரான Christine de Pizan ஐரோப்பியப் பெண்ணியச் சிந்தனை வெளிப்பாட்டின் தொடக்கமாகவும் இருக்கலாம். 16 நூற்றாண்டில் பிரான்சில் வாழ்ந்த Heinrich Cornelius Agrippa என்ற எழுத்தாளர் எழுதிய ‘Declamation on the Nobility and Preeminence of the Female Sex’, (1529) என்னும் நூல் பெண்களின் இறையியல் சார்ந்த தார்மீக மேன்மையை உணர்த்துவதாக The Second Sex” குறிப்பிடுகின்றது. இதே நூற்றாண்டில் இத்தாலியரான Moderata Fonte எழுதிய The Worth of Women’ (1600) என்னும் நூலும் பெண்களின் மேன்மையைப் பறைசாற்றுவதாக அமைந்தது என Simone de Beauvoir அம்மையார் தன் நூலில் தெரிவிக்கின்றார். Marie de Gournay (1565- 1645) என்ற பிரஞ்சுப் பெண்மணி எழுதிய The Equality of Men and Women’ (1622) and ‘The Ladies' Grievance’ (1626) என்ற இரு நூல்களும் பெண்களில் இருத்தலியல் பற்றிய விவாதங்களை முன்வைத்துள்ளன. 17ம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் பிறந்து அமெரிக்காவில் வாழ்;ந்த Anne Bradstreet (1612- 1672) என்ற பெண் கவிஞர் பெண்ணியம் தொடர்பில் முக்கியமானவராக அறியப்படுகின்றார். அமெரிக்காவின் முதல் பெண் கவிஞராக அறியப்படும் Bradstreet அம்மையாரே அமெரிக்காவில் பெண்ணியச் சிந்தனைகளை வெளிப்படுத்திய முதல் படைப்பாளராகவும் கருதப்படுகின்றார். பாரிஸ் நகரில் பிறந்து ஜெனிவாவில் வாழ்ந்தவரான jtuhd François Poullain de la Barre (1647 -1725) என்ற எழுத்தாளர் பெண்ணியல் சிந்தனையாளராக அறியப்படுகின்றார். பெண்களுக்காக எழுதிய ‘ஆண்’ என்ற வகையில் இவரது எழுத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. பிரஞ்சு நாட்டவரான Olympe De Gouges (1748 – 1793) முக்கியமானதொரு பெண்ணியலாளராகக் கருதப்படுகின்றார். பிரஞ்சுப் புரட்சி நடைபெற்ற காலங்களில் பெண்களில் உரிமைக்காக வலிமையாகக் குரல் கொடுத்தவராக இவர் அடையாளப்படுத்தப்பட்டிருக்கின்றார். 1789இல் நடைபெற்ற புரட்சிப் பேரணியில் பெண்கள் பெருமளவில் திரண்டமையின் பின்னணியிலும் இவர் செயற்பட்டிருக்கின்றார். பிரஞ்சுப் புரட்சி முடிவுற்றபோதும் பெண்கள் நிலை விடிவு பெறாதிருந்தது. ‘ உலக வரலாற்றில் மாற்றங்களை ஏற்படுத்திய பிரஞ்சுப் புரட்சியானது, பெண்கள் தொடர்பில் தோல்வியிலேயே முடிந்திருக்கின்றது’ என்ற கருத்துபட, 1791 இல் இவர் எழுதிய ஆக்கம் ‘Declaration of the Rights of Woman and the Female Citizen’ என்பதாகும். பிரித்தானியாவைச் சேர்ந்த Mary Wollstonecraft என்ற பெண்மணியே முதல் பெண்நிலை ஆய்வாளராகக் கருதப்படுகின்றார். இவர் எழுதிய நூல்களான ‘Vindication of the Rights of Woman’(1792), ‘Vindication of the Rights of Men’(1790) என்ற இரண்டையும் ஆய்வுக்கட்டுரைகள் என்றே Simone de Beauvoir குறிப்பிடுகின்றார். இவரைப் ‘பிரித்தானியப் பெண்ணியவாதத்தின் தாய்’ எனப் பிரித்தானியர் போற்றுகின்றனர். பிரஞ்சுப் புரட்சி நடைபெற்ற காலத்தில் 1789 ஓக்டோபர் 5ம் நாள் பாரிஸ் நகரில் பேரணியாகத் திரண்ட பெண்கள் ஆயுதங்களுடன் வார்சாய் நகருக்கு நடந்து சென்று அரச மாளிகையை முற்றுகையிட்டனர். இப்போராட்டம் பெண்களுக்கான உரிமைகளை முன்வைத்தே நடைபெற்றது எனப் பலரும் எழுதி வருகின்றனர். அது தவறான செய்தியாகும். “பசி, பட்டினியால் பாதிக்கப்பட்ட பெண்கள் ‘சிறார்களுக்கும் தமக்குமான உணவு கிடைக்க வேண்டும் என்பதோடு, அவை சமமாகப் பங்கிடப்பட வேண்டும்’ எனக்கோரி நடத்தப்பட்ட போராட்டமே இதுவாகும்” எனத் திரு க. வாசுதேவன் தன்னுடைய ‘பிரஞ்சுப் புரட்சி’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கின்றார். ஐரோப்பிய வரலாற்றில் பெண்கள் பெருமளவில் திரண்டெழுந்த முதல் நிகழ்வாக இதனைக் குறிப்பிடலாம். ஐரோப்பிய, வடஅமெரிக்க வரலாற்று நோக்கில் பதினெட்டாம் நூற்றாண்டு வரை பெண்ணியம் சார்ந்து நிகழ்ந்;த முன்னெடுப்புகளாக மேற்குறிப்பிட்ட செய்திகளைக் கருதலாம். Mary Wollstonecraft எழுதிய ‘‘Vindication of the Rights of Woman’ என்ற நூல் பல நாடுகளிலும் தாக்கங்களை ஏற்படுத்தியது. உலகெங்கும் பரவிய பிரித்தானிய ஆட்சியோடு இந்த நூலும் பரவியது எனலாம். பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படத் தொடங்கியதன் விளைவாக, பத்தொன்பதாம் நூற்றாண்டில் பல நாடுகள் பெண்கள் தொடர்பில் பல சமூக மாற்றங்களை ஏற்படுத்த முயன்றன. எடுத்துக்காட்டாக, • 1809இல் திருமணமான பெண்கள் பின்னுரிமை (wills) எழுதுவதற்கான இசைவை நியூயோர்க் மாநிலம் வழங்கியது. • 1811இல் திருமணமான பெண்கள் தமது பொருளாதாரம் தொடர்பாக முடிவெடுக்கவும் விரும்பிய தொழில்களைத் தேர்ந்தெடுக்கவும் ஒஸ்ரியா நாடு அனுமதித்தது. • 1821இல் அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான மேய்ன், திருமணமான பெண்கள் தன் சொத்துகளை ஆளுமை செய்யவும் கணவனால் இயலாதவிடத்து அவருடைய சொத்துகளைப் பாராமரிக்கவும் அனுமதித்தது. • 1829இல் பிரித்தானியரது ஆட்சிக்கு உட்பட இந்திய அரசு பெண்கள் ‘உடன்கட்டை’ ஏறும் வழக்கத்தைத் தடை செய்தது. 1884இல் மாநகரசபைத் தேர்தலில் கணவனை இழந்த, திருமணமாகாத பெண்கள் வாக்களிப்பதற்கான உரிமையை ஒன்ராறியோ அரசு வழங்கியது. கனடாவின் பிற மாகாணங்கள் இவ்வுரிமையை 1890இல் வழங்கின. பிரித்தானியா 1894லேயே உள்;ர் தேர்தலில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது. இவ்வாறாகப் பல நாடுகளும் பெண்கள் தொடர்பான புதிய மாற்றங்களை பத்தொன்பதாம் நூற்றாண்டில் நடைமுறைப்படுத்தின. இந்த நூற்றாண்டில் நாடுகள் தோறும் பல பெண்ணியலாளர் தோன்றினர். பெண்களுக்கான அமைப்புகளும் தோற்றம் கொண்டன. ‘Movement for English Feminism’ என்ற அமைப்பு 1850 இல் பிரித்தானியாவில் தோன்றியது. டென்மார்க் நாட்டில் Danish Women's Society or Dansk Kvindesamfund என்ற அமைப்பு 1871இல் தோன்றியது. இதுவே பெண்களுக்கான உரிமைகளை மையப்பபடுத்திய முதல் அமைப்பு எனக் கூறப்படுகின்றது. இந்த அமைப்பு 1885 தொடக்கம் வெளியிட்ட ‘பெண்களும் சமூகமும்’ (Women and Society- Kvinden & Samfundet) என்ற இதழே உலகில் பெண்களுக்காகத் தோன்றிய முதற் சஞ்சிகை எனக் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. பெண்கள் எழுச்சி தொடர்பாகப் பல இணையத்தளங்கள் குறிப்பிடுகின்ற ஒரு நிகழ்வு, 1857இல் நியூயோர்க் நகரில் பெண்கள் உரிமை கோரி நடத்திய பிரமாண்டமான ஆர்ப்பாட்டப் பேரணியாகும். நியாயமான ஊதியமும் உரிமைகளையும் கோரி நடத்தப்பட்ட இப்பேரணி ஆட்சியாளரால் கொடுமையாக அடக்கப்பட்டு, பெண்களும் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர் என்ற குறிப்பே பல இடங்களில் காணப்படுகின்றது. இக்கட்டுரை எழுதுவதற்காக உண்மையான செய்திகளைத் தேடியதில் கண்டறிந்த மிகப்பெரிய உண்மை எதுவெனில், மேற்கூறிய ஆர்ப்பாட்டப் பேரணி தொடர்பான எந்தவொரு வரலாற்று ஆதாரமும் இல்லை என்பதே. ‘. ‘ON THE SOCIALIST ORIGINS OF INTERNATIONAL WOMEN'S DAY’ ’ என்ற நூலை எழுதிய Temma Kaplan இத்தகவலைத் தருகின்றார். 1950களில் பிரஞ்சு நாட்டில் வாழ்ந்த சமத்துவக் கொள்கையாளரிடையே இக்கதை உலவியதாக இவர் குறிப்பிடுகின்றார். முதலாளித்துவத்துக்கு எதிரான போக்குக் கொண்டோர் இக்கதையை உருவாக்கியிருக்கலாம் என இவர் கருதுகின்றார். ‘1907 மார்ச் 8 நாள், நியூயோர்க் நகரில் பதினையாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பேரணியொன்றை நடத்தினர். ஊசி, ஆடை போன்றவற்றை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் பணிபுரிந்த இப்பெண்கள் ‘தமக்கான உரிமைகள் வேண்டும்’ என்ற கோரிக்கையை முன்வைத்தனர்’ என்ற செய்தியைச் சிக்காக்கோ பல்கலைக்கழக இணையத்தளக் குறிப்பொன்று தெரிவிக்கின்றது. 1857 மார்ச் 8இல் இல் நடைபெற்றதாகக் கருதப்படும் ஆர்ப்பாட்டப் பேரணியின் 50 ஆண்டை நினைவுகூறும் வகையிலேயே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என இக்குறிப்பு தெரிவிக்கின்றபோதும் Temma Kaplan இச்செய்தியை மறுக்கின்றார் என்பதையும் அது குறிப்பிட்டிருக்கின்றது. ‘1907 மார்ச் 8இல் நியூயோர்க் நகரில் நடைபெற்ற பெண்கள் பேரணியே அனைத்துலக மகளிர் நாளினது தொடக்கம்’ என, ஐரோப்பியர் பலரும் நம்புவதாகக் குறிப்பிடும் Temma Kaplan, கிளரா ஜெட்கின் (Clara Zetkin) என்ற ஜெர்மனியப் பெண்மணியின் பெரும் பணியே அனைத்துலக மகளிர் நாளின் தோற்றத்துக்குக் காரணம் என்கின்றார். 1889 இல் பாரிஸ் நகரில் Bastille கோட்டையில் நடைபெற்ற சமத்துவக் கொள்கையாளரின் கூட்டத்தில் மே நாள் பேரணிகள் பற்றிப் பேசப்பட்டன. அதில் கலந்து கொண்ட கிளரா ஜெட்கின் பெண்களின் தேவைகளை முன்வைத்தார். கூடியிருந்த இடதுசாரிகள், எட்டு மணிநேர வேலை, பெண்கள், சிறார்களை வேலைக்கு நிர்ப்பந்தித்தலை நிறுத்தல் போன்ற கோரிக்கைகளை மே நாள் ஊர்வலத்தில் முன்வைக்க ஒப்புக்கொண்டனர். ஜெர்மனியிலிருந்து வெளியான சோசலிச ஜனநாயகக் கட்சியின் பெண்கள் செய்தித்தாளான ‘Gleichhet’ இனது ஆசிரியராக 1890 முதல் 1915 வரை கிளரா ஜெட்கின் பணியாற்றினார். அவ்வேளை வேலை செய்யும் பெண்களின் அவலங்களை வெளிப்படுத்தினார். கட்சிக்கு உள்ளும் புறமுமமாகக் கடுமையான பெண்ணிய எதிர்ப்பாளர்களை அவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பெண்ணியச் சிந்தனைகளால் ஒன்றுபட்ட பெண்கள் பலரும் சமத்துவக் கொள்கை சார்ந்த பெண்களுக்கான அனைத்துலகக் கட்டமைப்பை உருவாக்க விரும்பினர். ஜெர்மனியில் உள்ள Stuttgart நகரில் 1907 ஒகஸ்ட் 17 நாளில் கூடிய கூட்டத்தில் சோசலிசக் கொள்கையின் கீழ் பெண்கள் அணி திரண்டனர். கிளரா ஜெட்கின், மற்றுமொரு ஜெர்மனிய சோசலிச பெண்ணியலாளரான Louise Zietz ஆகியோரின் தலைமையை பெண்கள் ஏற்றனர். பெண்களுக்கான உரிமைகளுக்காகப் போராடுவதுடன், தமது இலக்குகள் தொடர்பாக விவாதிக்கவும் விளங்கங்கள் தரவும் தயாராகினர். அமெரிக்கா, ஐரோப்பாவைச் சேர்ந்த சமத்துவக் கொள்கையாளர் பெண்களுடைய வாக்குரிமைக்காகப் போராடத் தயங்கினர். ஏனெனில் பெண்களின் அரசியல் உரிமைகள் யாவும் பொருளாதாரப் பலத்தைக் கொண்டிருந்த ஆண்களிடமே இருந்தன. பெண்களின் வாக்குரிமை பழமைவாதிகளையும் பலப்படுத்திவிடும் எனக் கருதினர். இருப்பினும் பெண்கள் சோசலிசக் கட்சியினரோடு தொடர்ந்து வாதிட்டனர். உரிமைகளைக் கேட்டுப் போராடும் அவசியத்தை வலியுறுத்தினர். அதில் வெற்றியும் பெற்றனர். இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அமெரிக்காவின் சோசலிசக் கட்சி வாக்குரிமைப் போராட்டப் பரப்புரைக்காக 1908 இல் தேசியப் பெண்கள் சபையை உருவாக்கியது. அத்தோடு பேரணிக்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறும் அச்சபையைக் கேட்டுக் கொண்டது. நியூயோர்க் நகரைத் தளமாகக் கொண்டு இயங்கிய கட்சியின் கிளையான சோசலிச ஜனநாயக பெண்கள் அமைப்பு மாபெரும் பேரணிக்கு ஏற்பாடு செய்தது. 1908 மார்ச் 8ம் நாள் நியூயோர்க் நகரில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினர். தொடர்ந்து அமெரிக்க சோசலிசக் கட்சி ஆண்டு தோறும் பெப்ரவரி இறுதி ஞாயிற்றுக்கிழமையைத் ‘தேசியப் பெண்கள் நாள்’ ஆக அறிவித்தது. அமெரிக்க சோசலிசக் கட்சி 1909 பெப்ரவரி 23ம் நாளும்; 1910 பெப்ரவரி 27ம் நாளும் நியூயோர்க் நகரில் தேசியப் பெண்கள் நாளைக் கொண்டாடியது. அதேவேளை இந்நாளை அனைத்துலகப் பெண்கள் நாளாகவும் இக்கட்சியினர் கொண்டாடியதாகக் Kaplan குறிப்பிடுகின்றார். ஜெர்மனியில் உள்ள Stuttgart நகரில் 1907 ஒகஸ்ட் 17 நாளில் பெண் சமத்துவக் கொள்கையாளர் அணி முன்னெடுத்த பொருளாதார சமவுரிமை, வாக்குரிமை போன்ற கோரிக்கைகள் பற்றிய விடயங்களையும் அமெரிக்க சோசலிசக் கட்சியினர் அறிந்திருந்தனர் என்கிறார் Kaplan. ஐரோப்பியப் பெண்ணியிலாளர் முதன்முதலாகப் பெண்ணியச் சிந்தனைகளுக்குச் செயல் வடிவம் கொடுத்திருந்தாலும் அமைப்பு வகையாக பேரணிகளையும் போராட்டங்களையும் அமெரிக்கர்களே முதலில் முன்னெடுத்திருந்தனர். ஐரோப்பிய சோசலிசப் பெண்ணியலாளர் 1911ம் ஆண்டிலேயே தமது முதல் நிகழ்வை முன்னெடுத்தனர். டென்மார்க் நாட்டின் தலைநகரான ஊழிநnhயபநn இல் அனைத்துலக சோசலிசப் பெண்கள் அமைப்பினர் 1910 ஓகஸ்டில் கூடினர். இந்தக் கூட்டத்தின் முதன்மையாளர்களான கிளாரா ஜெட்கின், Louise Zietz ஆகியோர் ஐரோப்பாவில் அனைத்துலப் பெண்கள் நாள் அடுத்த ஆண்டில் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர். ஆனால் நாள் குறிக்கப்படவில்லை. அமெரிக்கா பொஸ்டன் மாநிலத்தைச் சார்ந்த சோசலிசப் பெண்கள் அமைப்பினர் 1911 பெப்ரவரி 23ம் நாள் தேசியப் பெண்களை நாளை முன்னிட்டுப் பேரணி நடத்தினர். வெண்ணிற ஆடை அணிந்து பதாதைகள் தாங்கிய இப்பேரணி பொருள் பொதிந்ததாக இருந்தது என, ‘‘Women Journal’ என்ற இதழ் குறிப்பிட்டிருக்கின்றது. நியூயோர்க் நகரில் 1911 பெப்ரவரி 25ம் நாள் தேசியப் பெண்கள் நாள் நிகழ்வோடு அனைத்துலகப் பெண்கள் நாளும் கொண்டாடப்பட்டது. இக்கூட்டத்தில் ‘Bertha Fraser’ என்ற பெண்ணியலாளர் ஆற்றிய உரை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது. ஐரோப்பியர் முதன்முதலாக தமது ‘அனைத்துலகப் பெண்கள் நாளை’ 1911 மார்ச் 18இல் ஒஸ்ரியாவின் தலைநகரான வியன்னாவில் கொண்டாடினர். பெருமளவில் திரண்ட பெண்கள், வரலாற்றுக் காலந்தொட்டு மூடப்பட்டிருந்த இருப்புக் கதவுகளை அசைத்தனர். அடுத்து வந்த ஐந்தாண்டுகளில் பெண் குறிப்பிடத்தக்க உரிமைகளைப் பெறுவதற்குக் காரணமாக இப்பேரணி அமைந்தது. மறுநாளான மார்ச் 19ம் நாள் டென்மார்க், சுவிஸ்லாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் ‘அனைத்துலகப் பெண்கள்’ நாள் பேரணிகள் நடத்தப்பட்டன. 1911 மார்ச் 25 நாள் நியூயோர்க் நகர் Manhattan பகுதியில் துன்பகரமான நிகழ்வு ஒன்று நடைபெற்றது. இப்பகுதியில் இயங்கி வந்த Triangle Shirtwaist ஆடைத்தொழிற்சாலை மாலை 4:40 மணியளவில் தீப்பிடித்தது. 123 பெண் தொழிலாளர்களும் 23 ஆண் தொழிலாளர்களும் அத்தீயில் சிக்கிக் கொண்டனர். அனுமதியற்ற ஓய்வெடுத்தலைத் தவிர்ப்பதற்காகவும் திருடர் உள் நுழையாமல் இருக்கவும் உரிமையாளர் கதவுகளைப் பூட்டி வைப்பது இத்தொழிற்சாலையின் வழக்கமாக இருந்துள்ளது. இதனால் தீயில் சிக்கிக் கொண்ட அனைவரும் தப்ப வழியின்றிக் கருகி இறந்தனர். பெண்கள் போராடுவதை விரும்பாத முதலாளிகள் திட்டமிட்டுத் தீயூட்டியதாகப் பல இணையத்தளங்கள் கூறுகின்றன. அவை யாவும் ஆதாரமற்ற கருத்துகளாகும். Triangle Shirtwaist Factory fire என்ற இணையக் குறிப்பு, இவ்விபத்து பற்றி விரிவாகக் கூறுகின்றது. 1912 இல் அமெரிக்காவில் உள்ள டுயறசநnஉந பகுதியில் பணி புரிந்த ஆடைத் தொழிற்சாலைப் பணியாளர் பணிப் புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டமை முக்கியமாதொரு நிகழ்வாக நோக்கப்படுகின்றது. பாதுகாப்பான வேலை, போதிய ஊதியம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இப்போராட்டம் என ‘‘Rose and Bread’ அழைக்கப்பட்டது. இத்தொழிற்சாலைகளில் பெண்களே பெரும்பான்மையாகப் பணி புரிந்தனர். இருபதினாயிரம் பணியாளர் இப்போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படுகின்றது. 1914 இல் முதலாம் உலகப்போர் ஆரம்பித்ததனால் ஐரோப்பிய, அமெரிக்க பெண்கள் நாள் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறவில்லை. போர் பெண்கள் சிறுவர்களைப் பெரிதும் பாதித்தது. ஆங்காங்கே போருக்கெதிரான குரல்களைப் பெண்கள் எழுப்பினர். 1917 பெப்ரவரி 23 இல் இத்தாலியில் உள்ள Turin என்ற இடத்தில் ஏற்பாடு செய்ய்பட்ட அனைத்துலகப் பெண்கள் நாளில் ‘ஆயுதங்கள் வீழ்க’ எனப் பெண்கள் குரல் எழுப்பினர். இக்காலத்தில் ரசியா நாட்டில் முன்னெடுக்கப்பட்ட பெண்ணியம் சார்ந்த போராட்டங்கள் தனித்தன்மை வாய்ந்தவையாக அமைந்தன. 1913 பெப்ரவரியில் அமெரிக்காவைப் பின்பற்றி Bolsheviks க்குகளில் ஒருவரான Alexandra Kollontai என்ற பெண்ணியலாளரால் அனைத்துலகப் பெண்கள் நாள் முன்னெடுக்கப்ட்டது. அவ்வேளை ரசியாவை இரண்டாம் சார் நிக்கிளஸ் (Czar Nicholas II) என்ற மன்னனின் ஆட்சியின் கீழ் இருந்தது. மக்கள் போதிய உணவின்றியும் விலை உயர்வாலும் வாடினர். அரசுக்கெதிராகப் போராட்டங்கள் தொடங்கின. 1917ம் ஆண்டு ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் ஏறக்குறைய 5 இலட்சம் மக்கள் போராட்டங்களில் குதித்தனர். பெப்ரவரி 23இல் பெரும் பேரணி முன்னெடுக்கப்பட்டது. பெண்கள் பெருமளவில் திரண்டனர். Alexandra Kollontai இப்போராட்டங்களின் பின்னணியில் இயங்கினார். பெப்ரவரி 25 இல் எழுச்சி கொண்ட பெண்கள் அன்றைய நாளை அனைத்துலகப் பெண்கள் நாளாக முன்னெடுத்துப் போராட்டம் நடத்தினர். ரசிய அரசின் ஆயுதப்படை அப்போராட்டத்தை வெறிகொண்டு நசுக்கியது. எனினும் சாவுக்கு அஞ்சாது எழுச்சி கொண்ட மக்களுடைய போராட்டத்தினால் சார் நிக்கிளஸினுடைய ஆட்சி வீழ்ந்தது. புரட்சிக்குப் பெண்களின் ஆதரவோடு, புதிய ‘மக்கள் அரசு’ ஆட்சிக்கு வந்தது. அடுத்துவரும் ஆண்டுகளில் அனைத்துலகப் பெண்கள் நாளைக் கொண்டாட ரசிய அரசு திட்டமிட்டது. கிளரா ஜெட்கின் அம்மையாரின் உதவியுடன் ரசிய அதிபரான லெனின் 1922 இல் அனைத்துலகப் பெண்கள் நாளை விடுமுறை நாளாக அறிவித்தார். முதலாம் உலகப்போர் முடிவடைந்த பின், ஒஸ்ரியா அனைத்துலக மகளிர் நாளை 1918 மார்ச் 8 இல் கொண்டாடியது. 1936 இல் ஸ்பெயின் நாட்டில் பொதுவுடமைக் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன், மார்ச் 8ம் நாள் அனைத்துலகப் பெண்கள் நாள் நிகழ்வு, பேரணியாக முன்னெடுக்கப்பட்டது. ‘வளர்ந்து வரும் பாசிச அச்சுறுத்தல்களில் இருந்து பெண்கள் பாதுகாக்கப்பட வேண்டும்’ என்ற கோரிக்கை இப்பேரணி நடைபெற்றபோது முன்வைக்கப்பட்டது. ‘அனைத்துலப் பெண்கள் நாள்’ தொடர்ச்சியாக நடைபெறுவதற்கு இரண்டாம் உலகப் போர் பெருந்தடையாக இருந்தது. ஐரோப்பிய நாடுகளின் வாழ்வியல் சூழலை மையப்படுத்தித் தோற்றங்கொண்ட பெண்ணுரிமைப் போராட்டங்கள் உலகளாவிய பெண் சமூகத்தை முற்றுமுழுதாகப் பிரதிநிதித்துவப்படுத்தியவை எனக் கருதுவது பொருத்தமற்றது. ‘ஐரோப்பிய சமூகம் சார்ந்து முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள், அமைப்பு வகைப்பட்ட செயற்பாடுகளுக்கும் பின்னாட்களில் தோற்றங்கொண்ட உலகளாவிய செயற்பாடுகளுக்குமான வலுவான தொடக்கமாக அமைந்தன’ எனக் கொள்வதே பொருத்தமாக இருக்கும். 1975 ம் ஆண்டை, அனைத்துலகப் பெண்கள் ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அங்கீகரித்தமை வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். அத்தோடு மார்ச் 8ம் நாளை ‘அனைத்துலகப் பெண்கள் நாள்’ எனவும் அறிவித்தது. 1977 இல் ஐ.நா வின் பொதுச்சபை கீழ்க்காணும் தீர்மானத்தை நிறைவேற்றியது. ““United Nations Day for Women's Rights and International Peace to be observed on any day of the year by Member States, in accordance with their historical and national traditions. 2014ம் ஆண்டில் 100க்கு மேற்பட்ட நாடுகள் அனைத்துலக பெண்கள் நாளைக் கொண்டாடியிருக்கின்றன. 25 க்கு மேற்பட்ட நாடுகள் இந்நாளை விடுமுறை நாளாகக் கொண்டிருக்கின்றன. இவற்றுள் சீனாவும் வியட்னாமும் பெண்களுக்கு மட்டுமே விடுமுறை வழங்கி வருகின்றன. ஐக்கிய நாடுகள் சபை 2016ம் ஆண்டுக்கான அனைத்துலகப் பெண்கள் நாளை முன்னிட்டு பின்வரும் இலக்கை வெளியிட்டுள்ளது. “ஆண் பெண் உட்பட எல்லோரும் மிக விரைவில் பாலின சமச்சீர்மையை அடைவோம் என உறுதி கொள்வோம். பெண்கள் தமது இலக்குகளை அடைவதற்காக, பாலின சமச்சீர்மை மிக்க தலைமை உருவாக்கவும் பாலின வேறுபாடுகளின் பெறுமானத்தை உணர்ந்து மதிக்கவும் உள்ளார்ந்த நெகிழ்ச்சி கொண்ட பண்பாட்டு நடத்தைகளைப் பேணவும் பணியிடங்களில் காணப்படும் பாலின வேற்றுமைகளை வேரோடு களையவும் நாம் ஒன்றிணைவோம். பாலின சமச்சீர்மையை ஏற்படுத்தவல்ல நடைமுறைக்கேற்ற நடவடிக்கைகளைத் துரிதப்படுத்தவும் அவற்றைத் தாக்கமும் பொறுப்பும் மிக்கதான மையத்தில் ஒருங்கிணைக்கும் பணியில் நாம் தலைமையேற்று இயங்குவோம்.” இருபதாம் நூற்றாண்டு பெண்களின் பேருலகுக்கான வாசலை அகலத் திறந்துவிட்டது எனலாம். எனினும் ‘பெண்கள் ஆணுக்கு நிகராக அனைத்தையும் அடைந்து விட்டனர்’ எனக் கூறமுடியாதிருப்பது இந்த நூற்றாண்டின் பெருந்துயரமே. துணை நின்றவை: Jiz epd;wit: https://en.wikipedia.org/wiki/International_Ladies'_Garment_Workers'_Union https://en.wikipedia.org/wiki/Triangle_Shirtwaist_Factory_fire https://en.wikipedia.org/wiki/Olympe_de_Gouges https://www.youtube.com/watch?v=0uBs_ViOV2Y https://en.wikipedia.org/wiki/International_Women's_Day https://iwd.uchicago.edu/page/international-womens-day-history www.un.org/en/events/womensday On the socialist origins of International Women’s Day - Temma Kaplan Feminist Studies 11, No. 1 (1985), pp. 163-171. https://en.wikipedia.org/wiki/First-wave_feminism https://en.wikipedia.org/wiki/The_Second_Sex
,Ugjhk; E}w;whz;L ngz;fspd; NgUyFf;fhd thriy mfyj; jpwe;Jtpl;lJ vdyhk;. vdpDk; ‘ngz;fs; MZf;F epfuhf midj;ijAk; mile;J tpl;ldu;’ vdf; $wKbahjpUg;gJ ,e;j E}w;whz;bd; ngUe;JauNk.

khu;r; 2016 - jha;tPL ,jopy; ntspahd fl;Liu. 

nghd;idah tpNtfhde;jd; 


Jiz epd;wit:
On the socialist origins of International Women’s Day - Temma Kaplan Feminist Studies 11, No. 1 (1985), pp. 163-171.





No comments:

Post a Comment